ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார மற்றும் நகரத் தலைவர்களை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மதிக்கவில்லை.அதனால் அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாவட்ட தலைவர் ஆ.சங்கர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாங்கள் இந்திய தேசிய காங்கிரஸின் வட்டார நகர தலைவர்களாக பதவி வகித்து வருகிறோம், தற்போது ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கண்ணன் இதுவரை எங்களுக்கு வேட்பு மனு தாக்கல் தொடர்பாகவோ அல்லது துணை முதல்வர் வருகை தொடர்பாகவோ எந்தவித அழைப்பு மற்றும் தகவலையும் வழங்குவதில்லை, எங்கள் கட்சியில் கடந்த 60 நாட்களுக்கு முன்பாக மாவட்டத் தலைவர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது.வட்டார நகர தலைவர்களாக அவர்களே தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.இருந்த போதிலும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு எங்களை புறக்கணிப்பதாக உணர்கிறோம். தொடர்ந்து இந்த புறக்கணிப்பு நடைபெறுமேயானால், எங்களை அரவணைத்து செல்லும் வேட்பாளருக்கு நாங்கள் வாக்கு கேட்கும் சூழல் உருவாகும் என்றார், இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், ஆண்டிமடம் வடக்கு வட்டார காங்கிரஸ் சாமிநாதன், ஆண்டிமடம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜேந்திரன்,தா.பழூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சரவணன், ஜெயங்கொண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 Comments