நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.லதா, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக அன்புமணி அணி வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் செந்தில் பாண்டியன், பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் வேத.முகுந்தன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 7 பேர் களத்தில் உள்ளனர்.
பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் வேத.முகுந்தன் எட்டுக்குடி முருகன் கோவிலில் தனது ஆதரவாளர்களுடன் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்று எட்டுக்குடி, சித்தாய்மூர், திருக்குவளை, வாழக்கரை, மேலப்பிடாகை, சோழவித்யாபும் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்க்கொண்டார். வணிகர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் அவரது வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தனக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஒரே தொகுதியில் பாமக அன்புமணி அணி ராமதாஸ் அணி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவது கவணத்தை பெற்றுள்ளது.


0 Comments