அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 கல்வி ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை அவர்கள் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தளித்தார்.பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்ச்செம்மல் விருது பெற்றவருமான கவிஞர் ஜீவி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மொழிப்பாடங்கள் மற்றும் முதன்மைப்பாடங்களில் முதலிரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு நூற்பரிசுளையும் சான்றிதழ்களையும் வழங்கிச்சிறப்புரை ஆற்றினார்.
அவர் தமது சிறப்புரையில், " வானவில் நாளாக மலர்ந்திருக்கிற இந்நாளை மகிழ்ச்சி யோடு கொண்டாடும் உங்களை நான் அன்புடன் வாழ்த்துகிறேன்.கல்லூரியின் ஆண்டறிக்கையை மாணவர்களுக்கு மத்தியில் திறந்த புத்தகமாக வாசித்தளித்திருக்கிற இக்கல்லூரியின் முதல்வர் அவர்களையும், நிருவாகத்தையும் நான் பெருமிதத்தோடு வாழ்த்துகிறேன்.பொதுவாக பெயருக்கும், நபருக்கும் எப்போதுமே பொருந்தாத நிலையை நாம் சமூகத்தில் பார்க்கலாம்.ஆனால் இங்கே முதல்வரின் பெயர் ம. துரை என்பதை சேர்த்துப்படித்தால் மதுரை என்று சிறக்கும்.மதுரை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியது.ஆதலால்தான் முதல்வர் அவர்கள் தமிழால் இக்கல்லூரியை வழிநடத்துகிறார்.இக்கல்லூரியில் சேர்த்திருக்கிற நீங்கள் வாழ்வின் உச்சத்தை அடைய வேண்டும். யார் கைதட்டுவார்களோ அவர்களுக்கு நோய் வராது.யார் கைதட்டுவார்களோ அவர்களுக்கு இளமை நிலைக்கும்.யார் மேடையில் பேசுகிறவருக்கு கைதட்டுவார்களோ அவர்கள் ஒருநாள் மேடையில் ஏறி நானும் சாதித்தேன் என்பார்கள்.எனவே நண்பர்களே நண்பிகளே நீங்களும் உற்சாகமாகக் கைதட்டிப் பழகுங்கள். ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமென்றால் நீங்கள் ஆண்டு விழா நடத்துகிற ஏப்ரல் 2 அறிவாளிகள் தினமாக இன்று சிறப்புப் பெற்றுள்ளது.
வருங்காலத்தில் மாணவர்கள் நீங்கள் பாரதிகளாக, பாரதிதாசன்களாக, மாணவியர் வேலுநாச்சியார்களாக, ஜான்ஸி ராணிகளாக வலம் வர வேண்டும். உங்களுடைய பேச்சும் எழுத்தும் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்.தமிழ் உங்களை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள், தமிழ் மொழிமீது பற்றுக்கொள்ளுங்கள்.எவராலும் பறிக்க முடியாத, எவராலும் அழிக்க முடியாத சொத்துதான் இன்று நீங்கள் பயிலும் கல்வி" என்று பேசினார்.
கல்லூரிக்கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் து.சண்முகசுந்தரம், நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை நல்கினர்.
விழாவில் முனைவர் கா.காளிதாஸ், முனைவர் பா.கிளாடிஸ், முனைவர் ஏ.டேவிட்கலைமணிராஜ், உ.பூபதிராஜ், து.சிற்றரசு, முனைவர் ரா.பிரகதாம்பாள் உள்ளிட்ட துறைத்தலைவர்கள், தமுஎச அறந்தாங்கி நகரப்பொருளாளர் கவிஞர் கவி.கார்த்திக்,கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள், மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாகக் கல்லூரி வணிகவியல் துறை த்தலைவரும், ஆண்டு விழா ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கு.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக வணிகவியல் துறை விரிவுரையாளர் முனைவர் எஸ்.கார்த்திக் நன்றி கூறினார். தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் ச.கணேஷ்குமார் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை வணிகவியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-1 திட்ட அலுவலர் மு.பழனித்துரை மற்றும் மணிகண்டன், காமேஷ், காயத்ரி,புவனேஸ்வரி,கமலேஷ், காவிகா, ஜெகதீஸ்வரி, மகா, துர்க்கா, கெளசல்யா,அருண்,அபர்ணா, நிர்மலாதேவி, சுபாஷினி, திவ்யா உள்ளிட்ட மாணவ, மாணவியர் பலரும் சிறப்பாகச்செய்திருந்தனர்.




0 Comments