ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பொது அன்னதானம் மற்றும் இந்தக் கோவிலின் வருடாந்திர வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்புகட்டி துவங்கப்பட்டது தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது நேற்று முன்தினம் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தலையில் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவிலை அடைந்து, சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, வேல் குத்துதல் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கோவில் முன்பு பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த 128 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டு 2500 கிலோ கறி 10 அண்டாக்களில் சமைக்கப்பட்டு, 15 மூட்டை (100 கிலோ) 1500 கிலோ அரிசி, 10 சமையல் கலைஞர்களால் சமைக்கப்பட்டு தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தி பொது மக்களுக்கு அசைவ அன்னதானம் நடைபெற்றது. நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெறும் அன்னதானத்தில் கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுயம்பு தர்ம முனிஸ்வரரை தரிசித்து கம கம ஆட்டுக் கறிவிருந்து சாப்பிட்டு சென்றனர்


0 Comments