பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சிறுவர்கள் யோகாசனம் செய்து நோபல் உலக சாதனை

 


திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,புதுகும்மிடிப்பூண்டியில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் இயங்கி வரும் எலைட் வேர்ல்ட் ஸ்கூல் பள்ளி வளாகத்தில் வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 50 சிறுவர்கள் முட்டைகள் மீது அமர்ந்து பத்மாசனம் உள்ளிட்ட 15 வகையான யோகசனம் செய்து நோபல் உலக சாதனையை சிறப்பாக செய்து முடித்தனர்.மாலை 06.16 மணிக்கு துவங்கி 06.26.8 வினாடிகளில் அதாவது 10 நிமிடங்கள் 8 வினாடிகளில் இந்த நோபல் உலக சாதனையை செய்து முடித்து அசத்தியுள்ளனர்.



இந்நிகழ்ச்சிக்கு,வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் எஸ்.காலத்தீஸ்வரன் தலைமை தாங்கினார்.ஜெ.அர்ச்சனா,எஸ்.வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டி.நரசிம்மராவ்,புதுகும்மிடிப்பூண்டி கிராம ஒருங்கிணைப்பாளர் எல்.சுகுமாரன்,பேடிஎம் குரல் கலைஞர் உமாவிஜயகுமார்,போன்பே குரல் கலைஞர் மகிவிஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.நோபல் உலக சாதனைகள் நிகழ்ச்சியின் நடுவராக அ.நித்தியானந்தம் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை சான்றிதழை வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் எஸ்.காலத்தீஸ்வரனிடம் வழங்கி வாழ்த்தி பேசினார். முன்னதாக சிலம்பம் கலைக்கூடம் பி.கே.முத்துராமலிங்கம் குழுவினரின் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சி,யோகா நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றது.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை   வீணா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் எஸ்.காலத்தீஸ்வரன் தலைமையில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments