மக்கள் நேரம் செய்தி எதிரொலி.... சாயல்குடியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை..... தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல்

 


ராமநாதபுரம்  ராமநாதபுரம்மாவட்டம் சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக  நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்  இதனை தொடர்ந்து  சாயல்குடியில்  உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் மொத்தம் 27 லிட்டர் அளவிலான தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன.தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

செயற்கை நிறமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கலப்படங்கள் இருப்பதாக பொதுமக்கள்  புகார் தெரிவித்தனர் கலரை குடித்தவர்களுக்கு தொண்டை எரிச்சல், வயிற்று கோளாறு போன்ற உடல்நல பாதிப்புகள் வந்தன 

இந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் 49க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் 5 கடைகளில் தவறுகள் கண்டறியப்பட்டன இவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரதுறை அதிகாரி முத்துச்சாமி தெரிவித்தார் இதேபோல அபிராமம் கமுதி முதுகுளத்தூரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments