நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமார், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாகை நகர பகுதிகளில் திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சிக்கல், புத்தூர், அந்தனப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்ற அவர், பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி மற்றும் முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், தங்களது பகுதிகளில் உள்ள குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் விவசாயக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் சுகுமாரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
முன்னதாக, கட்சி தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் முன்னே சென்று பேரணியாக அமைந்த நிலையில், பின்னால் திறந்த வெளி வாகனத்தில் சென்ற சுகுமார், மக்களிடம் கைகூப்பி நன்றி தெரிவித்தார்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments