திருவள்ளூர் மாவட்டம்,மகேந்திரா சிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரிட்ஜ் கிரீன் அப்சைக்கிள் நிறுவனம் தகவல்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே மகேந்திரா சிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரிட்ஜ் கிரீன் அப்சைக்கிள் என்ற பேட்டரி கழிவுகளில் இருந்து புதிய பேட்டரி தயாரிப்பதற்கான தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது.
செல்போன் பேட்டரிகள், வாகனங்களின் பேட்டரிகள் உள்ளிட்ட பயனற்ற பேட்டரிகளை குப்பையில் வீசுவதற்கு பதிலாக மறுசுழற்சி முறையில் அதிலிருந்து புதிய பேட்டரி தயாரிப்பதற்கான மூலக்கூறுகளை இந்த நிறுவனம் தயார் செய்கிறது.இதன் மூலம் சிறியது முதல் பெரியது வரை புதிய பேட்டரிகளை உருவாக்க முடியும்.
இதற்கான திறப்பு விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட அரசு மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்த நிறுவனத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன் அய்யர் இந்த நிறுவனத்தில் பேட்டரி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மூலக்கூறு பொருட்கள் மற்றொரு புதிய பேட்டரியை செய்வதற்கு வழிவகுக்கும் இதற்கான முதல் தொழிற்சாலை கிண்டியில் தொடங்கப்பட்டது பின்னர் இங்கு தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மின்சார பிரச்சனையை மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு பேட்டரி மூலம் செயல்படும் மின்சார பயன்பாட்டை அதிகப்படுத்த இது உதவும் என தெரிவித்தார்.



0 Comments