திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் தெருவில் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த, பழமை வாய்ந்த, ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி தேவஸ்தானம் உள்ளது.
இக்கோவில் தற்போது புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 71 ஆம் ஆண்டு மஹோற்சவம், மற்றும் மூன்றாவது அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் 30ஆம் தேதி இன்று சனிக்கிழமை பகல் 12 30 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாணம் மாலை 5 மணிக்கு சிறப்பு அன்னதானம் 7 மணிக்குமேல் மஹா அபிஷேகம், மஹா அலங்காரம் தீபாரதனை, தீர்த்த பிரசாதம் விநியோகம் இரவு 10 மணிக்கு சீதா ராமர் லட்சுமணர் மற்றும்ஸ்ரீ பிரசன்னா ஆஞ்சநேயர் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளராக கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் முக்கிய நிர்வாகிகள் சால்வை மற்றும் மாலை அணிவித்து சுவாமி கலசங்களை வழங்கினர். கும்பாபிஷேக விழாவில் சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் புது கும்மிடிப்பூண்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



0 Comments