சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள சாலமோன் இல்லத்தில் வைத்து இன்று தென்காசி மாவட்ட, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்,மாவட்டத்தில் ஆசிரியராக பணிபுரிந்து இந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பணிநிறைவு பாராட்டு விழாவானது மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன் சாமுவேல், ஆசிரியர்கள் செந்தூர் பாண்டியன், ஜோஸ் மேத்யூ, இளங்கோ கண்ணன் மற்றும் ஜெபராணி ஆகியோர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சாலமோன் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேல்முருகன், ஆசிரியர்கள் நாகராஜ்,மாரியப்பன், மாரித்துரை, சந்திரசேகர், இசக்கியம்மாள், பொன்னரசி,பொன்மலர் மற்றும் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு பணி நிறைவுபெற்ற ஆசிரியர்களின் கல்விப் பணியைப்பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இறுதியாக பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பணியின்போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்துகொண்டு உரையாற்றியது அனைவருக்கும் நெகழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இறுதியாக மாவட்ட பொருளாளர் கற்பகம் நன்றி உரையாற்றினார்.

0 Comments