திருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்

 


பாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு திருப்பதி கோயிலுக்கு வருகை தந்துள்ளது. இந்நிலையில் திருமாவளவன் உள்ளிட்ட எம். பி.க்கள் இன்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தனர்.அவர்கள் இன்று காலை ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

பின்னர் கோயிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

இதையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: 

பாதுகாப்பு துறையின் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த 22ஆம் தேதியிலிருந்து ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. ஜம்மு காஷ்மீரில் தொடங்கி, பெங்களூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த அதிகாரிகளோடு கலந்துரையாடலில் பங்கேற்றோம்.நிறைவாக, இன்றைக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், கர்நாடக மேனாள் முதலமைச்சர், இப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் இங்கே திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்தோம். தேவஸ்தானம் மிகச் சிறப்பான முறையில் எங்களை வரவேற்று தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இந்த பயணம் அமைந்தது” என்றார்.

Post a Comment

0 Comments