முதலமைச்சரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

 


தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் நான்கு தனிச்செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது அமைச்சரவையில் தற்போது வரை 9 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் இன்று முறைப்படி அவரது முன்னிலையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் விஜயின் நான்கு தனிச்செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி தனிச் செயலாளர் 1 செந்தில்குமாருக்கு, நிதி, உள்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், தொழில்கள், கலால், பொது, குடிநீர் வினியோகம், எரிசக்தி, தொழில், முதலீட்டு மேம்பாடு, வணிகத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, சுகாதாரத்துறை, விஜிலென்ஸ் கமிஷன், பொதுப்பணித்துறை, சிறு துறைமுகங்கள் துறை, 

தனிச் செயலாளர் 2 லட்சுமி பிரியாவுக்கு,  முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை, வருவாய்துறை, நகர்ப்புறம், கிராமப்புறம், பஞ்சாயத்து, சமூகநலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு, வீட்டு வசதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 

தனிச்செயலாளர் 3, அண்ணாதுரைக்கு, கனிம வளம், நீர்வளத்துறை, வேளாண் துறை, கால்நடை மற்றும் மீன்வளம், கூட்டுறவு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கைத்தறி, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் காதி, போக்குவரத்து துறை, சட்டத்துறை, சட்டமன்ற அலுவலகம், மனித வளம், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம், 

தனிச்செயலாளர் 4, விஷ்ணுவுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, இளைஞர் நலன், சிறப்பு திட்டங்கள் அமலாக்கம், சுற்றுலா, கலாச்சாரம், சிறு குறு நடுத்தர தொழில், தொழிலாளர் நலன், திட்ட வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.





Post a Comment

0 Comments