கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு மேலாண்மை கண்காணிப்பு பயிற்சி



நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கான மேலாண்மை கண்காணிப்பு மதிப்பீட்டு பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செபஸ்தியம்மாள் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) சோ. ரம்யா வரவேற்றார்.



பயிற்சியில், உணவு பாதுகாப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பாதுகாப்பாக சமைக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், உணவு தயாரிக்கும் போது தீ விபத்துகளை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட உதவும் யோகா பயிற்சிகளும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளைச் சேர்ந்த சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.முடிவில், சத்துணவு பிரிவு உதவியாளர் எஸ். ஜெயஶ்ரீ நன்றி கூறினார்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments