நாகை மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ள ஸ்ரீ ரெங்கநாயிகா சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலின் சித்திரை பிரம்மோத்ஸவம் மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தி சிறப்பாக துவங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து “கோவிந்தா… கோவிந்தா…” என முழக்கமிட்டபடி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நகர்ந்த தேரோட்டம் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.
பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தேரோட்டம் தேர் நிலையை வந்தடைந்ததைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments