திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஆண்டாள் தெருவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக கடந்த சனிக்கிழமை அன்று கணபதி ஹோமம் மற்றும் கறிக்கோளத்துடன் தொடங்கியது.
அதே தினத்தில் வாஸ்து சாந்தி பிரவேச பலி முதல் கால யாக பூஜை பூர்ணாநிதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, தொடர்ந்து ஞாயிறன்று காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜையும் செய்யப்பட்டது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 9 மணிக்கு நான்கும் கால தியாக பூஜையும், ஸ்ரீ முனீஸ்வரர் கோபுர விமானத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
அப்போது உலகத்தில் கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முனீஸ்வரா, முனீஸ்வரா என கோஷமிட பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பூச்சிக்கப்பட்ட புனித நீர் பக்தகோடிகளின் மீது தெளிக்கப்பட்டது. எனது பக்த கோடிகளுக்கு அறுசுவை பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



0 Comments