பத்திரிக்கையாளரை அவமதிக்கும் அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா

 


 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோட்டத்தில் கோட்டாட்சியராக பணிபுரிபவர் அபிநயா, இவர் செய்தி சேகரிப்பதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் இவரை சந்திக்க சென்றபோது, இவரது உதவியாளர், சந்திக்க முடியாது என தெரிவித்த நிலையில், கோட்டாட்சியர் அபிநயா என்பவரிடம் இது குறித்து கேட்டபோது, யாராக இருந்தாலும், அலுவலக பணியில் இருக்கும் போது, சந்திக்க அனுமதிக்க முடியாது என ,தான் உத்தரவிட்டதாகவும் கூறினார்.

 இதற்கு செய்தியாளர் மாவட்ட ஆட்சியர் வந்தாலும் கூட இப்படி தான் உத்தரவு இருக்குமா? என கேள்வி எழுப்பிய போது,  தனது அறையில் கண்காணிப்பு கருவி இருப்பதாகவும், நான் சொன்ன யாராக இருந்தாலும் என்ற செய்தியை தவிர, நீங்கள் எழுப்பிய கேள்வியை பதிவு செய்யக்கூடாது. எனவும் தனக்கான அதிகார தோரணையில் பேசினார்.

ஒரு பத்திரிக்கையாளருக்கு இந்த நிலை என்றால், சாமானிய பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என, அந்த பத்திரிகையாளருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழக முதல்வரும்,மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்திரிகையாளர்கள் சார்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.

Post a Comment

0 Comments