ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி அருள்மிகு ஸ்ரீ தர்மமுனீஸ்வர் மற்றும் ஶ்ரீ கருப்பசாமி திருக்கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டலுடன் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை பால்குடம் மற்றும் நேத்தி கடன் செலுத்தும் பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ தர்ம முனிஸ்வரனுக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். நள்ளிரவு இரவு ஸ்ரீ தர்ம முனீஸ்வரருக்கு விசேஷ பூஜைகள் முடிந்த பின்பு கிடா வெட்டுதல் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. 160க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிடப்பட்டு நாளை காலை முதல் மாலைவரை அசைவ அன்னதானம் நடைபெறும் . கமுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்கள் இதில் கலந்து கொள்வர்.

0 Comments