யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறந்தாங்கி பேருந்து நிலையப் பணிகளை தொடங்குவோம்..... அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி......



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், சிகிச்சை வசதிகள், மருந்து இருப்பு, மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு மற்றும் மருத்துவமனை வளாகத்தின் தூய்மை உள்ளிட்ட அம்சங்களை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



தொடர்ந்து அறந்தாங்கி பேருந்து நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தூய்மை பணிகள் மற்றும் பேருந்து நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸ் கூறும்போது: 

தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சனை இருப்பதாக சொல்கிறார்கள் அதற்கான பிரச்சனைகளை மின்சார துறை அமைச்சர் பார்த்து வருகிறார் நிச்சயம் கூடிய விரைவில் சரி செய்து தருவார். அறந்தாங்கியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் பேட்டி.



அறந்தாங்கியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து கழிப்பறை வசதி சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதனை சில தினங்களில் சரி செய்து தருவோம்.

மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது இந்த ரெஸ்பான்ஸ் ஐந்து ஆண்டுகளும் கொண்டு செல்வோம்.அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது அந்த தண்ணீர் பிரச்சனையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கரகத்தில் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அவர் விராலிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நானும் மாவட்ட ஆட்சித் தலைவரும் நேற்று விராலிமலைக்கு சென்று இந்த போது எங்களை அவர் சந்தித்தார். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை.

அறந்தாங்கி பேருந்து நிலையம் குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்டு இன்னும் எளிதாக மக்கள் பயன்பெறும் வகையில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பேருந்து நிலையப் பணிகளை தொடங்குவோம்.



விபத்துகளை நடக்காத அளவுக்கு சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் நவீன வசதிகளை கொண்ட புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனையை விட அறந்தாங்கி அரசு மருத்துவமனையை கொண்டு வந்துள்ளோம்.

ஏதேனும் விபத்து நிகழக் கூடாது அப்படி விபத்தின் நிகழ்ந்தால் உடனே மருத்துவம் பார்க்கும் அளவிற்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனை உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேட்டி.



Post a Comment

0 Comments