கும்மிடிப்பூண்டியில் நவீன ஆம்புலன்ஸ் வசதிகளுடன் கூடிய பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனையை ஆர்.எஸ்.முனிரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்


திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி,ஆர்.எம்.அவன்யூ வளாகத்தில் அயநல்லூர் சாலையில் அமைந்துள்ள பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனையை ஆர்.எஸ்.முனிரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியத்தை கொண்ட பிரசாந்த் மருத்துவமனை குழுமத்தின் சார்பில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி,சி.டி.ஸ்கேன், ஏழு படுக்கை வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு,பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும்21 முழு நேர சிறப்பு மருத்துவர்கள் உடன் கூடிய 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவர்களின் சேவை, பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நலன்,எழும்பியல், இருதயவியல்,நரம்பியல், சிறுநீரகவியல்,குடல் இரைப்பையியல்,முழு உடல் பரிசோதனை,அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு விரைவாக மருத்துவ உதவி கிடைக்க 4 நவீன ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால வாகனங்களுடன் கூடிய இந்த மருத்துவமனை கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சேவை ஆற்றும் வகையில் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த மருத்துவமனையின் திறப்பு விழா நிகழ்ச்சி பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் கீதா ஹரிப்ரியா தலைமையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.கோபால்சாமி முன்னிலையில் நடைபெற்றது.இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.எம்.கே கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்தனர்.



ஆர்.எம். மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் மல்லிகார்ஜுனன்,டாக்டர் ராணி,டாக்டர் பிரவீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில். ஓ. எம். கிருஷ்ணன். அதிமுக.ஒன்றிய செயலாளர்கள். எஸ். எம். ஸ்ரீதர் பல்லவாடார். ரமேஷ் குமார். டி.சி மகேந்திரன். அபிராமன். சுதாகர். எம் எஸ் எஸ் சரவணன். அதிமுக திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியின் நிறைவாக பிரசாந்த் மருத்துவமனை டாக்டர் சம்யுக்தா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments