திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த பக்தர்களுக்கு சோழவரம் வடகிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானமும் இனிப்பும் வழங்கப்பட்டது. பெரவள்ளூர் வழக்கறிஞர் முருகதாஸ் ஏற்பட்டில் ஆலயத்துக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் அருண் பாண்டி பக்தர்களுக்கு இதனை வழங்கினார். அவருடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.



0 Comments