திருவாடானை பெரிய கோவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பால்குட உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து 1330 அடி உயரத்தில் கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.



கடந்த 10 நாட்களாக விழா நடைபெற்று வந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஏதுவாக பால்குட உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர்.  பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பக்தர்கள் அருள் பெற்றுச் சென்றனர்.



Post a Comment

0 Comments