அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஜெயங்கொண்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதன் பிறகு சட்ட மன்ற அலுவலகத்தில் கணபதி ஹோமம் செய்து, சக்கர பொங்கல் வைத்து குலதெய்வம் வழிபாடு நடத்தி அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியை குடிசை இல்லா சட்டமன்ற தொகுதியாக மாற்றுவது தனது முதல் பணி என தெரிவித்தார். அதுமட்டுமின்றி பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் மறவன், அதிமுக மாவட்ட அவை தலைவர் ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்ட பொது செயலாளர் இளையராஜா, பாமக நகர செயலாளர் மாதவன் தேவா,மாவட்ட மகளிர் அணி தலைவர் சந்திரா ராமச்சந்திரன், வன்னியர் சங்க நிர்வாகிகள்,மற்றும் அதிமுக , பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

0 Comments