நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி...... திருக்குவளையில் தவெக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


தமிழக முதல்வராக பதவி வகித்து வரும் நிலையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மு. சிவா தலைமையிலும் தவெக நிர்வாகிகள் இ.கார்த்தி,வி.ரவிநாத்,திருக்குவளை அகிலன் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகவும், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததாகவும் உள்ளது.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments