திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் வல்லூரில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம். எஸ். கே. ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. 



இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், வருகின்ற ஜூன் 3ஆ ம், தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து கிராம பகுதிகளிலும் திமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடுவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 திமுக தோல்விகளும் வெற்றிகளும். வரும் போகும் ஆனால் திமுக என்றும் போகாது திமுக என்பது பெருமை கொள்கிறேன் என்று நிர்வாகிகள் இடம்.பேசினார் கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாநில நிர்வாகிகள் அன்புவாணன்,பாஸ்கர் சுந்தரம், சி எச் சேகர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments