இராமநாதபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பாபு லத்தீப், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் தீவு பகுதி மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கினார்.
பாம்பன் தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் வீடுகளுக்கு சென்ற டாக்டர் பாபு லத்தீப், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்தார். மீனவர்களின் குடும்பத்தினருக்கு தவெக கட்சி தலைவரும் முதலமைச்சருமான விஜய்சார்பில் நிவாரண நிதியை வழங்கி ஆறுதல் கூறினார்.
டாக்டர் பாபு லத்தீப் பேசுகையில் "எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நம் மீனவ சொந்தங்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் விஜய் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தவெக எப்போதும் துணை நிற்கும். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.இந்நிகழ்வில் மண்டபத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், தினேஷ்குமார், கிளைச் செயலாளர் மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள், தவெக தொண்டர்கள் உடன் இருந்தனர்.


0 Comments