போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிப்பு

 


போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதாக கடலூர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


காவல் பதக்கம் பெறுவோர் விபரங்கள்

விவேகானந்த சுக்லா – கடலூர் எஸ்.பி.

ஜி. சந்தீஷ் – ராமநாதபுரம் எஸ்.பி.

ஸ்ரீ லட்சுமணன் – சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

வை. மனோஜ் குமார் – சென்னை காவல் உதவி ஆணையாளர்

மோ. கண்ணன்- திருச்சி காவல் ஆய்வாளர்

பொ. காமராஜ் – கோவை காவல் ஆய்வாளர்

மு. அருண் – தேனி காவல் உதவி ஆய்வாளர்

கே. ராஜ்குமார் – தேனி குமுளி காவல் நிலைய தலைமைக் காவலர்

க, கார்த்திகேயன் – நாகை வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய தலைமைக் காவலர்

அ. குத்புதீன் – புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர்

க. ராமர் – திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர்

மு. ஐயப்பன் – நெல்லை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர்

ந. பிரேம் குமார் – சென்னை அசோக் நகர் காவல் நிலைய தலைமைக் காவலர்

உ.பி. செந்தில் குமார் – கரூர் சிறப்பு உதவி ஆய்வாளர்

ச. ராமகிருஷ்ணன் -தேனி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்

உள்ளிட்டோருக்கு முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பதக்கங்கள், 2026ம் ஆண்டிற்கான சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments