1998-99 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..... 26 வருடங்களுக்குப் பின் பயின்ற பள்ளி கவரப்பேட்டையில் நடைபெற்றது......



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் 1998-99 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 10 ஆண்டுகளாக என்பது முன்னாள் மாணவ மாணவியர் வாட்ஸ்-ஆப் குழு ஒன்றை உருவாக்கி  ஒருவர் ஒருவர் தொடர்பு கொண்டு வந்தனர்.



இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த மாணவர்களும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். இதில் குறிப்பாக இந்த முன்னாள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வரவழைத்து நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.



 மேலும் தங்கள் படித்த பள்ளிக்கு சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான பீரோ, மேசை, நாற்காலி மற்றும் எழுத பலகை உள்ளிட்டவற்றை நினைவு பரிசாக வழங்கினார்கள். அதேபோல் 26 வருடங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் ஆறத் தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். நிகழ்வின் முடிவில் குழு புகை படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments