சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயில் கிராமத்தில் அமைந்துள்ள சுகந்தவனேஸ்வரர்,காசிவைரவர்,சமீப வள்ளிஅம்பாள் கோவில் ஆனி பால்குட திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க விரட்டு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் மேளதாளம் முழங்க ஜவுளிகள் கொண்டு வந்து மஞ்சுவிரட்டு திடலை வந்தடந்தனர்.அதனை தொடர்ந்து முதலாவதாக கோவில் காளை முதல் மரியாதை செய்து அவிழ்த்து விடப்பட்டது.

 மேலும் இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்பதற்காக சிவகங்கை மதுரை மேலூர் புதுக்கோட்டை  சிங்கம்புணரி பொன்னமராவதி மதகுபட்டி காரைக்குடி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சிரிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்களிடம் போக்கு காட்டி சென்ற காளையின் உரிமையாளர்களுக்கும் விழா குழு சார்பில் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை  கிராமபொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் திருப்பத்தூர் மற்றும் திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபட்டனர்.