தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த புகையிலை ஆய்வின்போது, கிராம நிர்வாக அலுவலர் ஜெயசீலன், தலைமைச் காவலர், முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜ் ஆகியோர், நேரடியாக சென்று கடைகளில் புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு நடத்தி, கடை உரிமையாளர்களிடம் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டாம் என எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.

0 Comments