கீழ்வேளூர் அருகே குருக்கத்தியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் மன்றம் மற்றும் கல்லூரி விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவ மன்ற ஆண்டு அறிக்கையை மாணவர் மன்ற ஆலோசகர் மற்றும் மண்ணியல் துறை இணை பேராசிரியை முனைவர். A. அனுராதா அவர்கள் வழங்கினார். பின்னர் வேளாண் விரிவாக்கத்துறையின் பேராசிரியர் முனைவர் T .தாமோதரன் அவர்கள் , கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தோட்டக்கலை இணை பேராசிரியரான முனைவர் P. R . கமல் குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
பின் இக்கல்லூரியின் முதல்வரான முனைவர் A . குருசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். செட்டிநாட்டில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வரான முனைவர் R. பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார் .மாணவர் மன்றத்தில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் தங்களது தனித் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினார். கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட முகில் விழா 2026 கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் இணை பேராசிரியர் வ. சக்திவேல் மற்றும் உதவி பேராசிரியர்களான S . மகாலட்சுமி, M காயத்ரி , A பாலசுப்ரமணியன், L . வெங்கடேசன் மற்றும் S கலை சுதர்சன் அவர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். முன்னதாக மாணவர் மன்ற செயலாளரான திரு மணிகண்டன் B வரவேற்புரை வழங்கினார் மற்றும் நிறைவாக மாணவர் தலைவியான A . ஃபைஜா பர்வீன் நன்றியுரை கூறினார்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments