நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சிறு உணவகங்கள் உள்ளிட்ட சுமார் 20 கடைகள் உள்ளது.இக்கடைகள் உரிய அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கடைகளை அகற்ற கால அவகாசம் அளித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைகளை வியாபாரிகள் தொடர்ந்து நடத்தி வந்தனர்,ஆக்கிரமிப்பில் உள்ள கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினர் கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்ற முயற்சி செய்தனர். தங்களது வாழ்வாதாரமான கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் உள்ள பொருட்களை வெளியேற்றி ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை மறித்தும் சாலையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்களது கடைகளை அகற்றக்கூடாது என வியாபாரிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் 15 நாட்களுக்குள் கடைகளை அகற்ற அவகாசம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கடை வைத்திருக்கும் தங்களுக்கு அரசு கடைகள் கட்டி வாடகை நிர்ணயம் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கடையை நம்பி லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருப்பதாகவும், கடையை அகற்றினால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் கடை உரிமையாளர்கள் அரசு சார்பில் கடைக்கட்டி கொடுத்தால் அதற்கான வாடகை செலுத்தி தங்களது வாழ்வாதாரத்தை பயன்படுத்திக் கொள்வோம் என அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்



0 Comments