திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட வேண்பாக்கம் பகுதியில் ஜெய் கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த பள்ளியில் சுமார் 1380 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் ஐந்து மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி உமையராணி தலைமையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சாதனை பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது மற்றும் பள்ளிக்குவிடுப்பு எடுக்காமல் வருகை தந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 58 மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி .ரஜனி உதவி தலைமை ஆசிரியர்கள் மஹாலக்ஷ்மி, ஶ்ரீபவானி, ஆசிரியர் பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி உமையா ராணி, உறுப்பினர்கள் D ரமேஷ்தன்ராஜ், மல்லிகா, சின்னமணி, ரஜினி, ரேகா , ஜாஸ்மின் மேரி, வினுப்பிரியா, முன்னாள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்புத்தனர் மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்கினர்.


0 Comments