திருப்பத்தூரில் தவெக சார்பில் நடைபெற்ற மாபெரும் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்.... நூற்றுக்கணக்கானோர் உற்சாகதோடு கண்டுகளித்தனர்.....



சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் முன்னிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பத்தூர் - சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு,கரிச்சான் மாடு எனஇரண்டுபிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரியமாடு பிரிவில் 12 ஜோடிகள், கரிச்சான் மாடு பிரிவில் 19 ஜோடிகள் என மொத்தம் 31 ஜோடிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மைல் தூரமும், கரிச்சான் மாடு பிரிவிற்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

 விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகை, கோப்பை, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் என நூற்றுக்கணக்கானோர் உற்சாகதோடு கண்டுகளித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள்  செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments