நாகை வேட்டைக்காரணிருப்பில் வீ தி லீடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

 


நாகை மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைக்காரணிருப்பு பகுதியில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இந்த முகாம் எஸ். தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. முகாமை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த இராம. வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவங்கி வைத்தார். அவர் உறுப்பினர் சேர்க்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, அதிகமானோர் இணைந்து அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.



இந்த முகாமில் தன்னார்வலர்களான ஜி. வீரராகவன், ஆர். தமிழ்செல்வன், கே. தினேஷ் குமார், என். சுதாகர், எம்.வைரமூர்த்தி ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். அவர்கள் ஆன்லைன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு, பொதுமக்கள் எளிதில் பதிவு செய்யும் வகையில் உதவி செய்தனர்.



முகாமில் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு உறுப்பினராக இணைந்தனர். இந்த முயற்சி மூலம் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைப்பினர் தெரிவித்தனர்.



 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments