காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடிகை திரிஷா போட்டோ வைக்க கோரி கவுன்சிலர் முழக்கம்

 


காரைக்குடி மாநகராட்சியில் நடிகை திரிஷா (Trisha) படத்தை வைக்க வேண்டும் என்று சுயேட்சை கவுன்சிலர் முழக்கம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று ஜூன் 24-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலரான சி. மெய்யர், “மாமன்ற கூட்டத்தில் ”நடிகை திரிஷா” படத்தை வைக்க வேண்டும் என்று முழக்கமிட்டார்.

மேலும், “திரிஷா படத்தை மன்றத்துக்குள்ள வெச்சே ஆகனும்”

“திரிஷா படத்தை வைக்கலைன்னா பெரிய கலவரம் நடக்கும்”

" எல்லோருடைய படத்தையும் அடுக்கிகிட்டே இருந்தா திரிஷா படத்தையும் வையுங்க" 

”ஆட்சி மாற்றத்துக்கு காரணமே திரிஷாதான்.. அடுத்த முதல்வரே திரிஷாதான்”

“அடுத்த முதல்வர் திரிஷா.. திரிஷா படத்தை கொண்டு வந்து வைங்க”

”அந்தப் படத்தை வை.. இந்தப் படத்தை வைன்னு சொல்லாம.. திரிஷா படத்தை வெச்சுட்டு கூட்டத்தை நடத்துங்க.. திரிஷா என்ன மட்டமா?”

”திரிஷா படத்தை வையுங்க”

“திரிஷா படத்தை வையுங்க”

என தொடர்ந்தும் சி. மெய்யர் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments