ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வட்டவழங்கல் வட்டாச்சியர்கள் தலைமையிடத்து துணைவட்டாச்சியர்கள் மண்டலதுணை வட்டாச்சியர்கள் என 36 துணை வட்டாச்சியர்களை பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்திரவிட்டுள்ளார்.
இதன்படி கமுதியில் தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியாற்றிவந்த பி.கீதா கடலாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் மண்டலதுணை வட்டாச்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார் இவருக்கு பதிலாக கடலாடியில் தேர்தல் பிரிவு துணைவட்டாச்சியராக பணியாற்றிய ஜி.சசிகலா கமுதி தலைமையிடத்து துணை வட்டாச்சியராக பணியிடமாறுதல் செய்யப்பட்டார் கடலாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் மண்டலதுணை வட்டாச்சியராக இருந்த ரேணுகாதேவி கமுதி வட்டவழங்கல் வட்டாச்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார் இதேபோல ராமநாதபுரம் பரமக்குடி திருவாடானை முதுகுளத்தூர் மண்டபம் முகாம் ராமேஸ்வரம் கீழக்கரை ஆர்.எஸ்.மங்கலம் வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரிந்த 36 துணை வட்டாச்சியர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

0 Comments