சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறை அட்மா மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மீனாப்பூர் கிராமத்தில் நெற்பயிரில் இயற்கை சூழல் முறையில் பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை துணை இயக்குனர் (உ.ப.நி) செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குனர் அவர்கள் வேளாண்மை சார்ந்த திட்டங்களான விளை நிலங்களைக் காப்போம் இயக்கம் பற்றியும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் அம்சமாக பூச்சிக்கொல்லிகளை அதிகம் தெளிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகளான குளவிகள் தட்டான் பொறிவண்டு சிலந்திகள் பாதிக்கப்படும் எனவும் மேலும் நன்மை செய்யும் பூச்சிகளை விட தீமை செய்யும் பூச்சிகள் பொருளாதார சேதார நிலை அதிகமாக இருக்கும் போது மட்டுமே ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளிக்க அறிவுரைகள் வழங்கினார்.
வேளாண்மை அறிவியல் நிலையம் குன்றக்குடி உதவி பேராசிரியர் முனைவர் பிரபு அவர்கள் நெல் ரகத் தேர்வு, விதை நேர்த்தி, விதையை கடினப்படுத்துதல் சமச்சீர் உரம் மேலாண்மை பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார் வேளாண்மை அலுவலர் சிவபிரிய தர்ஷினி வேளாண்மை துறையின் மூலம் விநியோகிக்கப்படும் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா திரவ பொட்டாஷ் இவைகளை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பயன்பாடுகளைக் குறித்தும் விவசாயிகளுக்கு எ கூறினார். மேலும் துணை வேளாண்மை அலுவலர் மனோஜ் குமார் மண் மாதிரி சேகரித்தல் முறைகள் விவசாய அடையாள எண் பதிவு,விதை நெல் ரகத் தேர்வு மற்றும் வேளாண் திட்டங்களை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா அவர்கள் கலந்து கொண்ட பண்ணைப் பள்ளி விவசாயிகளை நன்மை செய்யும் பூச்சிகள் பெயர்களை வைத்து ஐந்து குழுக்களக்காக பிரித்து ஒவ்வொரு குழுக்களுக்கும் வயல்வெளியில் அவர்களை பூச்சிகளை இனம் கண்டறிந்து சேமித்து வந்து பின்னர் வரைபடமாக வரைந்து நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் எதுவென்று கண்டறிந்து அனைத்து விவசாயிகள் முன்னிலையில் விளக்கமாக கூற வேண்டும் என்றும் மற்றும் அட்மா திட்ட செயல்பாடுகளை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் அவர்கள் உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைக் கொண்டு விதைநேர்த்தி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குனர் (உ.ப.நி )அவர்கள் மூலம் பண்ணை பள்ளி கிட் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் வழங்கப்பட்டது.

0 Comments