சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையார் மலை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கேரம் போட்டி இளைஞர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த போட்டியிலே திமுக சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெ.இ.பாண்டியன் துவக்கி வைத்து முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் வழங்கினார். இரண்டாம் பரிசு ரூபாய் 15 ஆயிரம் துணைத் தலைவர் ரமணி கணேசனின் மகன் ஜெகன் கணேசன் மற்றும் வெற்றிக்கோப்பை டி.டெல்லி பாபு வழங்கினார்கள். மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் கே. எஸ்.செல்வம் மற்றும் வெற்றிக்கோப்பை எஸ் முத்து பட்டாணி வழங்கினார்கள். நான்காம் பரிசு ரூபாய் 5 ஆயிரம் எம். விஜயகுமார் மற்றும் வெற்றிகோப்பையை எம். ஆர்.பார்த்திபன் வழங்கினார்கள் இந்த போட்டியில் மொத்த நூறு அணிகள் கலந்து கொண்டன.

0 Comments