திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் ஏனாதி மேல் பாக்கம்.கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ.ராதா ருக்மணி சமேத வேணுகோபால்சாமி திருக்கோவிலில் மஹா.கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு 5.லட்ச ரூபாய் செலவில் மூலஸ்தானம் ,பஞ்ச மூர்த்திகளுக்கு புனரமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்பாபிஷேக தினமான இன்று மூன்று கால யாக ஓமங்கள் செய்யப்பட்டு யாத்ரா தானத்துடன் கும்ப புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் பல்வேறு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா. என்ற கோஷத்துடன் சாமியை வணங்கினர். பின்பு அனைவருக்கும் கோவில் நிர்வாகம் ஊர் மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமி ஊர்வலம் வானவேடிக்கை.நடைபெற்றது.



0 Comments