கமுதி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்துக்கு ரூ.20000 அபராதம்



ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் கோட்டை சுந்தரமூர்த்தி(45). இவர் கடந்தாண்டு கமுதி குண்டாறு பாலம் அருகே உள்ள உள்ள சரவணா ஸ்டோரில் குட் ஹோம் என்ற நிறுவனத்தில் ரூம் ஃப்ரெஷ்ணர் (அறை நறுமணமூட்டி) வாங்கியுள்ளார். அந்த நறுமணமூட்டியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 75-க்கு பதிலாக, ரூ. 80 பெற்று அதற்கான ரசீது வழங்கியுள்ளனர். மேலும் காலாவதியான நறுமணமூட்டியையும் விற்பனை செய்துள்ளனர். 

இதனால் சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடாக கமுதி சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் மணிவண்ணன், மேலாளர் ராஜாராம் மோகன் வழங்க வேண்டும் என, ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கோட்டை சுந்தரமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் பிறவி பெருமாள், உறுப்பினர் குட்வின் சாலமோன்ராஜ் ஆகியோர், நறுமணமூட்டிக்கு வாங்கிய தொகை ரூ.80-ஐ திருப்பி வழங்க வேண்டும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் சின்ன சின்ன மளிகைகடைகளை மட்டும் தான் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர் எப்எஸ்சி சான்று உள்ளதா என கேட்பவர்கள் பெரியகடைகள் பக்கமே போவதில்லை மேலும் டிபார்ட்மேன்ட் ஸ்டோர் என்ற பெயரில் உள்ளகடைபக்கமே அதிகாரிகள் போவதில்லை ஏஜென்சிஸ் வைத்துள்ளவர் களிடமும் செல்வதில்லை காலாவதியான குடிநீர் 10 ரூ.கலர் தேதி முடிந்தது கடைகளில் விற்பனை ஆகுது சாக்லேட்  லேஸ் தேதி முடிந்தது எல்லாமே விற்பனை ஆகுது மாவட்டம் முழுவதும் பேரூந்து நிலையங்களில் குழந்தைகள் மாணவர்கள் உயிருடன் விளையாடும்  இத்தகைய பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காணமல் இருப்பது ஏன் என தெரியவில்லை ஆகையால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேதி முடிந்த உணவு பொருட்களையும் தண்ணி கலரையும் முற்றிலும் கைப்பற்றி அழித்து அபராதமும் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments