நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த ஆதமங்கலம் ஜீவா நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இன்டீரியர்ஸ் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இந்த கடையில் இன்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.தீ வேகமாக பரவிய நிலையில், கடையில் இருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்த உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று முதற்கட்டமாக தீயை கட்டுப்படுத்த முயன்றனர். தொடர்ந்து தகவல் கிடைத்ததும் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர். மேலும் தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டனர்.இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சம்பவம் தொடர்பாக வலிவலம் போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments