சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட உஞ்சனை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று புகழ்பெற்று திருவோண சக்கர வர்த்தியார் என்ற ஆலயம் வரலாற்று புகழ் பெற்ற திருத்தலமாகும். இவ்வாலயத்தை சுற்றி கருவேல் மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது பு இதனால் இக் கோவில் சிதலமடைந்து காணப்படுகிறது.
இந்த ஆலயத்தினை சீரமைக்க வேண்டும் என முந்தைய அரசாங்கங்களிடம் கோரிக்கை வைத்த நிலையில், ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும், இந்த கோவில் காடு நிறைந்து மூடியே கிடக்கிறது என்றும், இந்தக் கோவில் சிறப்பு வாய்ந்த வரலாறு கூறும் ஆலயமாகும் என்றும், இந்த ஆலயத்திலிருந்து பசும் பால் புதுக்கோட்டை பகுதிக்கு முன்னோர்கள் காலத்தில் கொண்டு சென்றுள்ளனர் , என வரலாறுகள் கூறுகிறது.
இதனை இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில் தெளிவாக கூறுகிறது கோவில் முன்புறம் குளம் அதற்குப் பின்புறம் மயானமும் அமைந்துள்ளது, இக்கோவிலை சுற்றி முருகன் சிலை மற்றும் புகழ்பெற்ற தெய்வங்களின் சிலைகள் உள்ளதாகவும், இவைகள் எல்லாம் தற்போதுத காடு, புதர்கள் நிறைந்து காணப்படுவதாகவும் , இவற்றையெல்லாம் அகற்றி தந்து கோவிலை புதுப்பித்து தர வேண்டும் எனவும்,உஞ்சனை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகமான பொதுமக்கள் வசித்து வருவதால், மக்கள் வழிபட எதுவாக இருக்கும் என்றும், மாவட்டம் முழுவதும், வரலாற்று நிறைந்த ஆலயங்கள் போற்றப்படுவது போல,இந்த ஆலயம் புகழ் பெற்று விளங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும், அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர், வரலாற்று புகழ் பெற்ற, போற்றப்பட வேண்டிய ஆலயத்தை போற்றுவதும், காப்பதும் அரசின் கடமை என்பதை நாமும் உணர்த்துகின்றோம்.




0 Comments