சுற்றுச்சூழல் அமைச்சர் தொகுதியிலேயே சுகாதாரச் சீர்கேடு..... அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி.....



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வி கே ராஜீவ்' உள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சரின் சொந்தத் தொகுதியான திருவாடானையில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடு மலிந்து காணப்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


​திருவாடானை பகுதியில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால், அப்பகுதியின் கழிவுகள் மற்றும் குப்பைகள் அனைத்தும் திருவாடானை கண்மாய் மற்றும் மணிமுத்தாறு கிளையாற்றுப் பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இதனால் கண்மாய் நீர் கடுமையாக மாசடைந்து வருவதுடன், அப்பகுதி முழுவதும் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.



​மேலும், திருவாடானையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் முறையான வடிகால்கள் மூலம் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான கொசுத்தொல்லை ஏற்பட்டு, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.


​இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சரின் தொகுதியிலேயே இந்த அவலநிலை நீடிப்பது வேதனையளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் தேங்குவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments