தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரங்கநாதபுரம் விலக்கு அருகே மனநலம் பாதித்த நபர் சுற்றி திரிந்தார். ஆண்டிபட்டி தலைமைக் காவலர் நாகராஜ் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் மனநலம் பாதித்த நபரை மீட்டார். கழுத்தில் காயத்துடன் இருந்த வாலிபரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சிகிச்சைக்கு பின் விசாரித்ததில் அந்த நபர் மத்திய பிரதேசம் மான்லா மாவட்டம் கோகோ கிராமத்தைச் சேர்ந்த தயாதாஸ் சோன்மானி மகன் சஞ்சீவ் சோன்மானி 29, என்பது தெரிய வந்தது. சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். பின்னர் அவரது அண்ணன் சஞ்சய் சோன்மானி , நண்பர் ரோஹித்குமார் பின்ஸ்கியா ஆகியோர்களை வரவழைத்து சஞ்சீவ் சோன் மானியை ஒப்படைத்தனர். மனநலம் பாதித்து மொழி பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தவரை மீட்டு, ஆண்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் வாலிபரின் சிகிச்சைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைத்த நிகழ்வை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.



0 Comments