கரப்பான் பூச்சி கட்சியுடன் பாஜக கூட்டு - மூத்த பத்திரிக்கையாளர்கள் துக்ளக் சத்யா

 


டெல்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கும் நீட் விவகாரத்துக்கும் உண்மையில் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் பெயரில் வழக்கம் போல மோடி எதிர்ப்புப் போராட்டமே நடந்துள்ளது.நீட்டை எதிர்ப்பதுதான் மாணவர்களுக்கு ஆதரவான செயல் என்று நம்பிய பலரும் போராட்ட ஜோதியில் கலந்து விட்டனர்.

மாணவர்களை முன் நிறுத்தி கரப்பான் பூச்சி கட்சியும், கரப்பான் பூச்சி கட்சியின் பின்னால் நின்று கொண்டு தேச விரோத சக்திகளும் நடத்திய போராட்டம், விட்டுக் கொடுக்கும் அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டதால் முடிவுக்கு வந்துள்ளது.இது தவிர்க்க முடியாத பின் வாங்கல் என்றாலும், நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் மனப்பூர்வமாக ஏற்க முடியவில்லை.நீட் கேள்வித்தாள் கசிவுக்கு தர்மேந்திர பிரதான் பொறுப்பு என்றால் அவர் முதலிலேயே ராஜினாமா செய்திருக்கலாம். அவர் மீது தவறில்லை என்றால் கடைசி வரை விலகத் தேவையில்லை.

போராட்டக்காரர்களின் கையை ஓங்க விட்டு, அதன் பிறகு அவர்களிடம் பணியும் நிலையை  மத்திய அரசு தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு விட்டதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. போலீஸ், ராணுவம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருந்தும் மத்திய அரசு  இப்படி இறங்கிப் போனதைத் தவிர்த்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது.15 நாட்கள் வேறு எந்த வேலையையும் கவனிக்க முடியாமல் போராட்டக்காரர்களை சமாளிப்பதற்கே போய் விட்டதை ரசிக்க முடியவில்லை.நெருக்கடி கொடுத்தால் பணிந்து விடுவோம் ' என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லியிருப்பது மத்திய அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு தேவையற்ற உற்சாகத்தையே தரும்.தேச விரோத சக்திகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்க வேறு வழியில்லாத நிலையில் மத்திய கல்வி அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது மத்திய அரசு.பின்னர் அவரை  அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம், தேச விரோத சக்திகளை போராட்ட களத்திலிருந்து வெளியேற்றுவதே இப்போது முக்கியம் என்று முடிவெடுத்து அரசு பணிந்துள்ளது. அல்லது, கரப்பான் பூச்சி கட்சியுடன் பின்னர் கூட்டு வைக்க பாஜக நினைத்துள்ளதோ என்னவோ.மத்திய அரசின் ஸ்ட்ராட்டஜி புரியவில்லை.

நேபாளம் பங்களாதேஷ் புரட்சிகள் இங்கும் நடக்கும் என்பது போன்ற போராட்டக்காரர்களின் கோஷங்கள்‌ மன்னிக்கத்  தகுந்தவை‌ அல்ல. தேச விரோத சக்திகளை தயக்கமின்றி ஒழித்துக் கட்டுவது ஒன்றே சரியான தீர்வு. இப்போதைக்கு  அத்தகைய வலுவோடு மத்திய அரசு இல்லை என்று மட்டும் புரிகிறது.

இது ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சம்பவம். இப்படி மிரட்டினால் எந்த காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கலாம். இந்த நிலை வேண்டாத விபரீதங்களுக்கே வழி வகுக்கும்.

மத்திய அரசுக்குத் தேவை அதிகபட்ச முன் எச்சரிக்கை என துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments