ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிக்கு செல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் கட்டிடத்தின் தரம் குறித்தும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆய்வு செய்து தரமான கட்டிடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை.

0 Comments