சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு..... காவல்துறை நடவடிக்கை கோரி முதுகுளத்தூர் தவெக நிர்வாகிகள் புகார்......

 


தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வரும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, முதுகுளத்தூர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

 அந்த மனுவில், மாவட்டச் செயலாளர் மதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்யான மற்றும் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதுகுளத்தூர் பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments