தமிழகத்தில் அரசியல் தளத்தில் நடிகர் தனுஷின் செயல்பாடுகள் குறித்து கவனம் அதிகரித்து வரும் நிலையில், அவரது 43வது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாட்டியக்குடி ஊராட்சியில் அகில இந்திய தனுஷ் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்கத்தின் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பழனிச்சாமி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு நாகை மாவட்ட தலைவர் மற்றும் டெல்டா மண்டல அமைப்புச் செயலாளர் லியோ டி.ஆர். கார்த்தி தலைமையேற்று, தனுஷ் மக்கள் இயக்கக் கொடியை ஏற்றி வைத்தார்.நாகை மாவட்ட பொருளாளர் ஜி.டி.எக்ஸ். வசந்த் மற்றும் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் என்.வி. இளஞ்சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் நாகை மாவட்ட செயலாளர் செல்வம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சிவா, நாகை மாவட்ட துணை தலைவர் சுதாகர், மயிலாடுதுறை மாவட்ட துணை தலைவர் எட்வின் ராஜ், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் அப்பு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாரதிராஜா, துணை செயலாளர் சத்தியவரதன், ஒன்றிய இணையதள பொறுப்பாளர் பி.ஆர். சச்சின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், மதிய உணவும் வழங்கப்பட்டது.அரசியல் தளத்தில் நடிகர் தனுஷின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பரபரப்பு நிலவி வரும் சூழலில், இதுபோன்ற நிகழ்வுகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


0 Comments