இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் முகம்மது இஸ்மாயில் இல்ல வரவேற்பு விழா, ரமீஸ் - தலீலா தம்பதியினருக்காக கடந்த ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள தி கிங்ஸ்பரி ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல, முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, முன்னாள் நீதித்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகருமான மித்ரி குணரத்ன, தொழிலதிபர் கே டி எம் எஸ் அவுதார்,விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காயல் சாஹிப்,சமூக ஆர்வலர் கீர்த்தி தென்னகோன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்தீன், நிலந்த பெரேரா மற்றும் முன்னாள் துணை மேயர் மொஹமட் மன்சில் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர்.விழாவில் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடியது குறிப்பிடத்தக்கது.


0 Comments