திருக்குவளை அருகே சாலை விபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு சில தினங்களுக்கு முன்பு திரும்பிய இளைஞர் பலி



திருக்குவளை தாலுகா திருவாய்மூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சண்முகராஜ் (25) சீராவட்டம் – திருக்குவளை மெயின் சாலையில் வெள்ளைத் திடல் இரட்டை மின்கம்பம் அருகே, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தனது  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



மேலும், அவர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்றும், இந்த இருசக்கர வாகனம் வாங்கி மூன்று நாட்களே ஆனதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், போதிய பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments